ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசியல் லாபத்துக்காக தர்மயுத்தம்... ஓபிஎஸ் பற்றி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை கூறுவது என்ன?

அரசியல் லாபத்துக்காக தர்மயுத்தம்... ஓபிஎஸ் பற்றி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை கூறுவது என்ன?

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வரின் வாரிசாக ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தற்செயலான நிகழ்வல்ல/ நிகழ்வாகத் தோன்றவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ஆணையத்திடம், ஜெயலலிதா மரணம் இயற்கைக்கு மாறானது என்ற சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார்.. பின்னர் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

  தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் தொடர்பாக, ’எந்த சூழ்நிலையில் மறைந்த முதல்வர் மரணமடைந்தார் என்பதை அறிய ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் எனப்படும் போராட்டத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டார். விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தான் வைத்தார். ஆனால் அவருக்கு தெரிந்த வரையில் மறைந்த முதல்வரின் மரணம் இயற்கைக்கு மாறானது என்ற சந்தேகம் இல்லை என்று அவர் தனது சாட்சியத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசுவாமி ஆணையத்தின் முழு அறிக்கை

  மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிதும் காலத்தினை தாழ்த்தாமல் தமிழக முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக் கொள்ளத் தயார் நிலையிலிருந்து, மறைந்த முதல்வரின் வாரிசாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தற்செயலான நிகழ்வல்ல/ நிகழ்வாகத் தோன்றவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: இது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்- ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தகவல்

  அதிகார மையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாக கிடைத்த பதவி அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றும் ஏமாற்றத்தினால் கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அரசியல் லாபத்தை அடையும் நோக்கில் தர்மயுத்தம் தொடங்கினார் என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalithaa Dead, O Panneerselvam, OPS