ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு: சபாநாயகர் தனபால் இன்று விசாரணை..

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சபாநாயகர் தனபால் இன்று காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த உள்ளார்.

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு: சபாநாயகர் தனபால் இன்று விசாரணை..
ஓ.பன்னீர் செல்வம்
  • Share this:
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017 பிப்ரவரி 18-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிமுகவைச் சேர்ந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

எனவே, அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி திமுக சார்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.


இந்நிலையில், இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரியிருந்த சபாநாயகர் தனபால், வியாழக்கிழமை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தவுள்ள சபாநாயகர் தனபால், 11 எம்.எல்.ஏ.க்களின் விளக்கங்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...புதிய ₹ 2,000 நோட்டுகள் என்னாச்சு...? ரிசர்வ் வங்கி விளக்கம்இந்நிலையில், மனக்குழப்பத்தில் நடந்த தவறு என 11 பேரும் விளக்கம் அளிப்பார்கள் என்று கூறும் வழக்கறிஞர்கள், அதை சபாநாயகரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைக்கும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading