Home /News /tamil-nadu /

சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா திடீர் சந்திப்பு!

சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா திடீர் சந்திப்பு!

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் சசிகலாவை ஓ.ராஜா சந்தித்தார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் சசிகலாவை ஓ.ராஜா சந்தித்தார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் சசிகலாவை ஓ.ராஜா சந்தித்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசியுள்ளார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனது தென் மாவட்ட பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என தெரிவித்தார்.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவில் இரட்டை தலைமை தான் தோல்விகளுக்கு காரணம் என்றும் சசிகலா தலைமையின் கீழ் அதிமுக வரவேண்டும் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி பேட்டியளித்தார்.

    "என் உயிரிலும் மேலான தலைவரப்பா" மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகத்தின் சுவாரஸ்யங்கள்

    இதை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவு குரல்கள் அதிமுகவில் அதிகரித்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முடிவு என்ன என்பது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சசிகலா தனது தென் மாவட்ட சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.

    இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி சென்றார்.அதன்பின்னர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாபதி கிராமம் சென்று அங்குள்ள பழம் பெருமை வாய்ந்த விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் உவரி வழியாக திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துப் பேசியிருக்கிறார்.

    சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் சசிகலாவை ஓ.ராஜா சந்தித்தார். திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா அங்கு உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இங்கு சசிகலாவை சந்திக்க வந்த ஓபிஎஸ் சகோதரர் ராஜா, சசிகலா சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றதால் 3 மணி நேரம் அதே விடுதியில் காத்திருந்து சசிகலாவை சந்தித்தார்.

    தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் சந்திப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனிதனியே அவர்களின் ஆதரவாளர்களுடன் சசிகலா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, OPS, OPS - EPS, VK Sasikala

    அடுத்த செய்தி