Home /News /tamil-nadu /

சசிகலாவுடன் சந்திப்பு... தம்பி ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஓ.பன்னீர் செல்வம்

சசிகலாவுடன் சந்திப்பு... தம்பி ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, சசிகலாவை சந்தித்து பேசிய நிலையில் அவரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

    இதையும் படிங்க - இந்த தீர்ப்புக்காக தான் உயிரோடு காத்திருந்தேன் - கோகுல்ராஜ் தாய் கண்ணீர்

    இதனையடுத்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்தாா். சுமாா் 3 மணி நேரம் காத்திருந்த ஓபிஎஸ் சகோதரர் ராஜா தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலாவை சந்தித்தாா்.

    இதையும் படிங்க - தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி முகாம்

    இந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், கட்சியில் இருந்து ஓ.ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பில் ஒருங்கிணைப்பாளரும் ராஜாவின் அண்ணனுமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

    அவருடன் எஸ். முருகேசன், வைகை கருப்புஜி, எஸ்.சேதுபதி ஆகியோரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி