முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு..!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு..!

ஓபிஎஸ் பேனர் கிழிப்பு

ஓபிஎஸ் பேனர் கிழிப்பு

ADMK : அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கட்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர் கிழிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கே வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர் கிழிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இன்று நடைபெறும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறிவரும நிலையில், இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை அலுவலத்திற்கு முன்பாக இபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். அவர்கள் இபிஎஸ் வாழ்க என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், அங்கே வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்த நிலையில், ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. இதுகுறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

Must Read : தேனியில் இருந்து ஓபிஎஸ் சென்னைக்கு அவசர பயணம்

அத்துடன், அதேபோன்ற  பேனர் அங்கே உடனே வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

First published:

Tags: ADMK, Banners, EPS, O Panneerselvam, OPS