Home /News /tamil-nadu /

14 பேரை அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு

14 பேரை அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கான செயலாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் பட்டியலை வெளியிட்டார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கான செயலாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் பட்டியலை வெளியிட்டார்.

    அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக, அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெயபிரதீப் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இப்படி இரு தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வந்தனர்.

    இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதாவது, ரத்தான ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், இணைச்செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கான செயலாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் பட்டியலை வெளியிட்டார்.

    1. V.N.P வெங்கட்ராமன்
    (கழக வர்த்தக அணிப்பிரிவுச் செயலாளர்)

    2. ஆர்.தர்மர்
    (இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்)

    3. கோபாலகிருஷ்ணன்,
    (கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர்)

    4. கோவை k செல்வராஜ்
    (கழக செய்தித் தொடர்பாளர்)

    5. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,
    வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச்செயலாளர்

    6. M.M.பாபு
    தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

    7. ரெட்சன் அம்பிகாபதி,
    தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

    8. ஜே.கே.ரமேஷ்
    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

    9. ராஜ்மோகன்
    திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

    10. மகிழன்பன்
    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச்செயலாளர்

    11. அசோகன்,
    சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்

    12. ரஞ்சித் குமார்,
    காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்

    13. சிவலிங்கமுத்து,
    திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

    14. வி.கே.கணபதி
    தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, O Pannerselvam, OPS

    அடுத்த செய்தி