Home /News /tamil-nadu /

சென்னை வரும் பிரதமர் மோடி.. இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே சந்தித்து பேச திட்டம்

சென்னை வரும் பிரதமர் மோடி.. இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே சந்தித்து பேச திட்டம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் இம்முறை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் தலையிட ஆர்வம் காட்டவில்லை என பாஜகவின் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    அதிமுகவில் கோஷ்டி மோதல் நிலவி வரும் சூழலில், இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்தும், தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இடையே கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதற்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.

    இந்த பின்னணியில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவுவுபசார விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, குட்கா முறைகேடு வழக்கு, அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் வருகையின் போது நடந்த வன்முறை, சசிகலா விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருந்ததாக கூறப்பட்டது.

    ஆனால், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் நேரம் ஓதுக்காததால், எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதாக தெரிகிறது. முன்னதாக ஜூன் 23-ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அன்று இரவே டெல்லி புறப்பட்டு சென்ற ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கும் நேரம் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: டெல்லி பயணத்தை பாதியில் முடித்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி.. குடியரசுத் தலைவர் பதிவியேற்பில் பங்கேற்கவில்லை

    இதனால், ஏமாற்றத்துடன் இருந்து வந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் நேரம் ஒதுக்கப்படாதது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
    அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் இம்முறை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் தலையிட ஆர்வம் காட்டவில்லை என பாஜகவின் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    இருப்பினும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வரும் 28-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை இருவரும் சந்திக்க நேரம் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக சந்திப்பாரா ? அல்லது தனித்தனியே சந்திப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Edappadi Palanisami, Narendra Modi, O Panneerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி