ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் வர்ணாஸ்ரமம்? கேள்விகளை அடுக்கும் திருமா! மீண்டும் புகையும் மனுதர்ம விவகாரம்!

சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் வர்ணாஸ்ரமம்? கேள்விகளை அடுக்கும் திருமா! மீண்டும் புகையும் மனுதர்ம விவகாரம்!

திமுகவின் மூத்த அரசியல்வாதிகளில் ஆ.ராசாவும் ஒருவர் என்ற போதிலும், இந்து மதம் குறித்த ஆ.ராசாவின் கருத்துகளுக்கு ஆதரவளிக்க தனது கட்சியினரே முன்வரவில்லை.

திமுகவின் மூத்த அரசியல்வாதிகளில் ஆ.ராசாவும் ஒருவர் என்ற போதிலும், இந்து மதம் குறித்த ஆ.ராசாவின் கருத்துகளுக்கு ஆதரவளிக்க தனது கட்சியினரே முன்வரவில்லை.

திமுகவின் மூத்த அரசியல்வாதிகளில் ஆ.ராசாவும் ஒருவர் என்ற போதிலும், இந்து மதம் குறித்த ஆ.ராசாவின் கருத்துகளுக்கு ஆதரவளிக்க தனது கட்சியினரே முன்வரவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனுதர்மம் எங்கே உள்ளது என கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், 6ம் வகுப்பு சிபிஎஸ்இ பாட புத்தகத்திலிருந்து வர்ணாஸ்ரமத்தை குறிக்கும் விளக்கப்படம் ஒன்றை ட்வீட் செய்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

மறுபுறம், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், அக்கட்சியின் மூத்த தலைவரான ஆ.ராசா, மனுதர்மத்தைப் பற்றிய தனது கருத்துக்களால் சமீபத்தில் கடும் சர்ச்சையை கிளப்பினார். சில தினங்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில் பேசுகையில், மனு சாஸ்திரத்தில், சூத்திரர்கள் என்றால் வேசியின் மகன் என குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் பேசியிருந்தார். இதற்கு பாஜக தனது எதிர்வினையை ஆற்றியிருந்தது, மனுதர்மம் நடைமுறையில் இல்லை, ஆனால் ஆ.ராசா தேவையில்லாமல் அதைப் பற்றி பேசி இந்துக்கள் மனதைப் புண்படுத்திவிட்டார்’ என கூறினர்.

கூடுதலாக,  இனி சாதி முக்கியமில்லை என்றும் வர்ணாஸ்ரம தர்மம் நடைமுறையில் இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ஒன்றில், ‘மனுதர்மம் அல்லது வர்ணாஸ்ரம தர்மம் எங்கே என்று கேள்வி எழுப்பும் நபர்களின் கவனத்தை ஈர்க்கவே இதை கொண்டு வந்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பாஜக  வர்ணாஸ்ரம தர்மத்தை போதிப்பதாகவும், ஆறாம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் அது விளக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், திருமாவளவன், இந்துக்கள் நான்கு வகையில் மட்டுமே வருகிறார்கள் என்று மேற்கோள் காட்டினார். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகப் பிரிவினர் இந்த நான்கு பிரிவுகளைச் சாராதவர்கள், என்றார்.

சர்ச்சை: 

ஆ.ராஜா இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக வீடியோ வைரலானதை அடுத்து, அவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். தமிழகத்தில் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ராசாவின் கருத்துக்கு பாஜக ஆவேசமாக பதிலளித்திருந்தது. ஆ.ராசா ஒரு குறிப்பிட்ட குழுவினரை தனிமைப்படுத்தி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியது பாஜக. இதற்கிடையில், திமுகவின் ஆ.ராசாவை மிரட்டியதாக கோவையில் பாஜக பிரமுகர் ஒருவர் செப்டம்பர் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். கோவையில் பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது சனாதன தர்மம் குறித்து பேசியதற்காக ஆ.ராசாவை மிரட்டி துணிவிருந்தால் கோவை நகருக்குள் நுழைந்து பார்க்கட்டும் என சவால் விடுத்திருந்தார்.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் நிறுவனர் தந்தை பெரியார் ஆகியோரை இழிவுபடுத்தியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பாலாஜி உத்தமராமசாமியை பீளமேடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வரவழைத்து, விசாரணைக்குப் பிறகு போலீஸார் அவரை கைது செய்தனர்.

பின்னர், திமுக மூத்த தலைவர் ஆ.ராசா தனது கருத்தில் உறுதியாக நின்று, சமீபத்தில் மீண்டும் இந்து மதம் குறித்து கருத்து தெரிவித்ததால், மற்றொரு சர்ச்சை கிளம்பியது.

ஆதரவு: 

திமுகவின் மூத்த அரசியல்வாதிகளில் ஆ.ராசாவும் ஒருவர் என்ற போதிலும், இந்து மதம் குறித்த ஆ.ராசாவின் கருத்துகளுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க அவரது கட்சியினர் முன்வரவில்லை. இருப்பினும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பெரியார் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் கூட ஆ.ராசாவுக்கு தங்களது முழு ஆதரவை அளிக்க முன்வந்தனர்.

எதிர்ப்பு:

இதற்கிடையே, பாஜக பல போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் 21 அன்று தனது கட்சி மாநிலம் முழுவதும் ஆ.ராசாவுக்கு எதிராக மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையே பெரும் மோதலுக்கு வழிவகுத்த இந்து மதம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், ஆறாம் வகுப்பு சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் காணப்படும் வர்ணாஸ்ரமம் குறித்த பாடம் மற்றொரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Published by:Archana R
First published:

Tags: A Raja, BJP, DMK