நான் தோற்றுவிடுவேன் என்று சொல்பவர்கள் எதற்காக மெகா கூட்டணி அமைக்கின்றனர் - மோடி

மத்திய அரசு ஊழலுக்கு பூட்டு போட்டுள்ளது, இத்தகைய ஆட்சியையே காமராஜர் விரும்பினார் என பிரதமர் மோடி பேசினார்

நான் தோற்றுவிடுவேன் என்று சொல்பவர்கள் எதற்காக மெகா கூட்டணி அமைக்கின்றனர் - மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: February 10, 2019, 8:29 PM IST
  • Share this:
மோடி தோற்றுவிடுவார் என்று கூறும் எதிர்க்கட்சியினர் எதற்காக மெகா கூட்டணி அமைக்கின்றனர் என்று பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆந்திராவிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடியை, விமானநிலையத்தில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றடைந்தார். திருப்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘மோடி தோற்றுவிடுவார் என்று கூறும் எதிர்க்கட்சியினர் எதற்காக மெகா கூட்டணி அமைக்கின்றனர். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் மோடி, மோடி என்று மோடியை வசைபாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மோடியை வசைபாடும் கருத்துகள் தொலைக்காட்சியில் மட்டுமே இடம்பெறும், மக்கள் மனதில் அல்ல. மத்திய அரசு ஊழலுக்கு பூட்டு போட்டுள்ளது, இத்தகைய ஆட்சியையே காமராஜர் விரும்பினார். மருத்துவத் துறையில் கலப்படத்தை ஏற்காதது போல அரசியலிலும் கலப்படத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள், எதிர்க்கட்சிகளை ஏற்க மாட்டார்கள்’’ என்று பேசினார்.


விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை - பிரதமர் மோடி


Also watch

First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்