TN Budget | பட்ஜெட் கூட்டத்தொடரில் CAA, ஹைட்ரோ கார்பன், குரூப் - 4 தேர்வு முறைகேடு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

TN Budget | பட்ஜெட் கூட்டத்தொடரில் CAA, ஹைட்ரோ கார்பன், குரூப் - 4 தேர்வு முறைகேடு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
தமிழக சட்டப்பேரவை
  • News18
  • Last Updated: February 13, 2020, 12:16 PM IST
  • Share this:
நாளை பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, குடியுரிமை திருத்த சட்டம் பிரச்னை, 'ஹைட்ரோ கார்பன்' திட்டம், 'குரூப் - 4' தேர்வு முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, குடியுரிமை திருத்த சட்டம் பிரச்னை, 'ஹைட்ரோ கார்பன்' திட்டம், 'குரூப் - 4' தேர்வு முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.


டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்ற, சட்டம் இயற்றும்படியும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் கொண்டு வரும்படியும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.

Also see...
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading