மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது: தலைவர்கள் கண்டனம்

மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது: தலைவர்கள் கண்டனம்
நக்கீரன் கோபால்
  • News18
  • Last Updated: October 9, 2018, 12:57 PM IST
  • Share this:
மூத்த பத்திரிக்கையாளராக இருக்கும் நக்கீரன் கோபால் கைதிற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆவார். இவரை இன்று விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். புனே செல்ல அவர் விமான நிலையம் வந்த போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தார்.

இதனை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவரான ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்” என்று  தெரிவித்திருந்தார்.


நக்கீரன் கோபால்


மேலும், அருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல் செய்தது தொடர்பாக ஆடியோ கேசட் வெளிவருவதற்கு முன்னரே இத்தகைய சம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரிவித்தது நக்கீரன் பத்திரிகையாகும். அதன் பிறகு அதுதொடர்பான வழக்கு விசாரணை சம்பந்தமாக பல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு முறையான விசாரணை நடைபெற வேண்டுமென நக்கீரன் பத்திரிகை எழுதி வந்தது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து புகார் வந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னரே அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது கண்டனத்திற்குரிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, நக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்றும், பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் தொடச்சியாக எழுதியதை காரணம் காட்டி நக்கீரன் கோபால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து எழுதியது ஆளுநர் பணியில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு கோபால் அவர்கள் கைதுச் செய்யப்பட்டிருப்பது ஆளுநர் அலுவலகத்தின் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் கோபால் கைது செய்யப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் அதன் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இதனிடையே கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை போலீசார் அனுமதிக்கவில்லை.  இதனைத் தொடர்ந்து வைகோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்ததைக் கண்டித்து, சிந்ததாதிரிப் பேட்டை காவல்நிலையத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

First published: October 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading