தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலே கிள்ளி எறியவேண்டும்... துரைமுருகன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலே கிள்ளி எறியவேண்டும்... துரைமுருகன் வலியுறுத்தல்!
  • Share this:
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலே கிள்ளி எறியவேண்டும்  என்று எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

நேரமில்லா நேரத்தில் பேசிய துரைமுருகன், தமிழகத்தில் இரண்டு இடங்களில் வெடி குண்டு வீசப்பட்டு மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி உள்ளதாக தெரிவித்த துரைமுருகன், மதுரையில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டிலும், எங்கள் மாவட்ட அமைச்சர் வீரமணி வீட்டிலும் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அமைச்சரிடம் செல்லலாம், அமைச்சருக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வது என்றார்.  இதுபோன்ற நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் துரைமுருகன்  வேண்டுகோள் விடுத்தார்.


அதேபோல் கும்பகோணத்தில் இரும்பு கம்பியால் அடித்து வீடு புகுந்து கொலை கொள்ளை நடத்துவது வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் அரசு எடுத்த நடவடிக்கை என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜோலார்பேட்டையில் பீடி தொழிற்சாலையில் நடந்தது சாதாரண தீவிபத்து தான் என்றார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஊடகங்களில் தவறான செய்தி வந்துள்ளது.

இதுதொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. வழக்கும் பதிவு செய்து கைது நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருந்து விருதுகளை பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading