முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எளிய மக்களுக்கு ஆவின் பொருட்களை கிடைக்கவிடாமல் தடுப்பதுதான் விடியலா? - எடப்பாடி பழனிசாமி!

எளிய மக்களுக்கு ஆவின் பொருட்களை கிடைக்கவிடாமல் தடுப்பதுதான் விடியலா? - எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆவின் பொருட்களை எட்டா கனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்ப்படுத்த முடியும் என்கிற நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆவின் நெய் விலை 3வது முறையாக உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவின் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்ந்து வருகிறது. ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 580 ரூபாயில் இருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆவினில், 5 லிட்டர் நெய் பாட்டில் பாட்டில், 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ. 630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 200 மி.லி 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆவின் நெய் விலை உயர்வுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பழனிசாமி, ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “ஆன்லைன் ரம்மி.. ஆசைவார்த்தை அள்ளிவிட்டு அழைக்கும் பிரபலங்கள்..” ராஜ் கிரண் வேதனை

கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது. எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டா கனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்த விடியா திமுக அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ.20 உயர்த்தியுள்ளனர். எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: Aavin, EPS