திமுக-வையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிபிசி தயாரித்த குஜராத் குறித்த ஆவணப்படம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் திரையிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலிபூங்குன்றன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆவணப்படத்தை பார்த்த பின்னர் பேசிய திருமாவளவன், வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள மோடியிசம் bbc நிறுவனத்தால் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. குஜராத் வன்முறைக்கு பின்னால் சங்பரிவார் அமைப்புகளும் பாஜகவும் இருந்திருக்கிறது என்பது வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்துள்ளார் மோடி. மீண்டும் ஒருமுறை மோடி பிரதமர் ஆனால் இந்த நாடு என்ன ஆகும் என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி.
சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது முன்னால் உள்ள மிகப்பெரும் சவால். எனவே, திமுகவையும் திராவிடத்தையும் பெரியாரையும் எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல. இந்துத்துவத்தையும் அதன் சனாதனத்தையும் எதிர்ப்பது தான் தமிழ் தேசியத்தின் அங்கம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BBC, Chennai, Narendra Modi, Thol. Thirumavalavan, VCK