ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அறிவித்துள்ளார்.
தென்னக இரயில்வே மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் கோட்ட மேலாளர் பத்மநாபன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கு திறனை கண்காணிப்பது, பயணிகள் சேவையை மேம்படுத்த மின்னணு தரவுகளை பகுப்பாயும் தொழில்நுட்பம் உள்ளிட்ட ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு தரப்பட இருக்கிறது.
இதற்கான விரிவான தகவல்களை
www.innovation.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஜீன் 21 முதல் இணையத்தில் தொழில் முனைவோர் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ரூ.1.50 கோடி நிதியுதவி, தொழிலை விரிவுபடுத்த ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட புதிய தொழில்நுட்பம் இந்திய ரயில்வே முழுவதும் செயல்படுத்தப்படும்.
மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை நிறைவு பெற்றவுடன் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். மதுரை - தேனி ரயிலை சென்னை வரை நீட்டிக்கும் திட்டமில்லை. மதுரை - போடி இடையே சரக்கு ரயில் இயக்க மதுரை ரயில்வே கோட்டம் தயாராக உள்ளது. மதுரை - தேனி இடையே ரயில் இயக்குவது சவாலாக உள்ளது, ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள், செல்பி எடுப்பது, ரயிலுக்கு மிக அருகில் நடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கும் போது மக்கள் குறுக்கே வருவதால் ரயிலை இயக்குவதில் சிரமம் உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமான ரயில்கள் கையாளப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கு போதிய இடவசதியும் இல்லை. இதனால் மதுரை - கோயம்புத்தூர் பிரிவில் கூடுதல் ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரூ.358.63 கோடி மதிப்பில் நடைபெறப் போகும் மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு வேலைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களுடன் நாளை (ஜூன் 17) சென்னையில் நேர்காணல் நடைபெற இருக்கிறது. வருகிற ஜூலை 25 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அதன்பின்பு மறு சீரமைப்பு பணிகள் துவங்கும்" என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.