டாஸ்மாக் செல்லாதீர்கள் என்று தங்களது தொண்டர்களை எதிர்க்கட்சிகளால் கட்டுப்படுத்த முடிந்ததா? அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி

அமைச்சர் கடம்பூர் ராஜு.

”டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிரான போராட்டம் அரசியலுக்காக மட்டுமே பயன்பட்டது. நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அதற்கு மேல் கருத்துக் கூற முடியாது”

  • Share this:
டாஸ்மாக் திறப்புக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்தது விளம்பரத்திற்காக என அமைச்சர் கடம்புர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர், கயத்தார், கழுகுமலை பகுதியிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தனது சொந்த நிதியிலிருந்து அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மதுபான ஆலைகள் யார் நடத்தி வருகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். முன்னாள் மத்திய அமைச்சர், தற்போது நாடாளுமன்ற உறுப்பிராக இருப்பவர்களுக்கு எல்லாம் சொந்தமாக மதுபான ஆலைகள் உள்ளன என்பது ஊரறிந்த உண்மை என்றார்.

மேலும் கூறுகையில், ஊரை ஏமாற்றுவதற்காகவும் மக்களிடம் விளம்பரம் தேடுவதற்காகவும் கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் தங்கள் தொண்டர்கள் யாரும் டாஸ்மாக் பக்கம் போகக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்க முடிந்ததா, கட்டுப்படுத்த முடிந்ததா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. இது அரசியலுக்காக மட்டுமே பயன்பட்டது. நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அதற்கு மேல் கருத்துக் கூற முடியாது என்றார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: