• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

  • Share this:
    மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை 5ம் கட்டத்தில் உள்ளது. விவசாயச் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்து வருவதால், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

    நாடு முழுவதும் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி தம் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ”விவசாயிகளை திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் விவசாயிகளை திசை திருப்ப தி.மு.க, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இதை, தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளனர். அவர்கள் ஏமாற மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

    மேலும், புதிய விவசாய சீர்திருத்த சட்டங்களால் விவசாயிகள் அடையப் போகும் நன்மைகளை விவசாயிகளிடம் எடுத்துரைக்க வரும் 8ம் தேதி முதல் மக்கள் இயக்கம் நடத்த உள்ளதாகவும் அதில் பாஜக நிர்வாகிகள் சென்று விவசாயிகளை சந்தித்து எடுத்துச் சொல்வார்கள் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: