#OperationJJ | மறைந்து கிடக்கும் மரண ரகசியம்... ஆபரேஷன் ஜெ.ஜெ...!

#OperationJJ | இந்த நிகழ்ச்சி ஜூலை 20-ம் தேதி (இன்று) மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் இரவு 7:00 மணிமுதல் 8:00 மணி வரை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

#OperationJJ | மறைந்து கிடக்கும் மரண ரகசியம்... ஆபரேஷன் ஜெ.ஜெ...!
ஆபரேஷன் ஜெ.ஜெ
  • News18
  • Last Updated: July 20, 2019, 9:29 AM IST
  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம்... மர்மமாகவே இருக்கும் நிலையில், பலரின் வாக்குமூலங்கள் அடிப்படையில் விடையற்றுக்கிடக்கும் சில கேள்விகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, விடை தேட முயற்சித்திருக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா அங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதை பதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது? அவருடைய உடலுக்கு என்ன பிரச்னை? என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள் தரப்பட்டன? அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத்தவறின? என்பன போன்ற கேள்விகள் ஜெயலலிதாவின் மரணத்தைச் சுற்றிச் சுழல்கின்றன.

ஜெயலலிதா



இவற்றில் சில கேள்விகளுக்குப் பகுதி அளவிலான பதில்கள் வருகின்றன. பல பதில்கள் புதிய புதிய கேள்விகளை எழுப்புகின்றன. சில பதில்கள் உண்மை என்று நாம் நம்பக்கூடிய பல செய்திகளின் மீது சந்தேகத்தை பாய்ச்சுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடும் முகமாகவே ஓய்வு பெற்ற நீதிபதிஆறுமுகசாமி தலைமையில் விசாரணைகமிஷன் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை குறித்த செய்திகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி புதிய முயற்சியைத் தொடங்கியது. அதன்பெயர், ”ஆபரேஷன் ஜெ.ஜெ”. ஜெயலலிதாவின் மரணம் என்பது ஒரே நாளில் நடந்த நிகழ்வாக இருக்கலாம். ஆனால், அந்த மரணத்துக்குக் காரணமான நோய்கள் ஒரே இரவில் உருவானவையல்ல என்பது உறுதி. எனில், எப்போது முதல் ஜெயலலிதாவின் உடலை நோய்கள் பாதிக்கத் தொடங்கின? அந்த நோய்களுக்கு என்ன காரணம்?

அன்றாடப் பணிகள் மட்டும்தான் ஜெயலலிதாவை உருக்குலைத்தனவா அல்லது அதைத்தாண்டிய அரசியல் காரணங்களும் உள்ளனவா? ஜெயலலிதாவின் மரணப் போராட்டம் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் தொடங்கியதா அல்லது பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆரம்பித்ததா?
ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி (கோப்புப் படம்)


இன்னும் இன்னும் பல கேள்விகள் விடையற்றுக் கிடக்கின்றன. அப்படியான சில கேள்விகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, விடைதேட முயற்சித்திருக்கிறது, நியூஸ்18 தமிழ்நாடு. இப்படிப்பட்ட முயற்சியை எந்த வொரு தமிழ் தொலைக்காட்சியும் செய்திடாத நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் பதிவான ஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் துணையோடும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களின் உதவியோடும் “ஆபரேஷன் ஜெ.ஜெ” என்ற நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.



இந்த நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் ஜூலை 20-ம் தேதி மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் இரவு 7:00 மணிமுதல் 8:00 மணி வரை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

20th July 2019 (சனிக்கிழமை) 7.00 to 8.00 PM.(ஆபரேஷன் ஜெ.ஜெ -Episode 1)
27th July 2019 (சனிக்கிழமை) 7.00 to 8.00 PM.(ஆபரேஷன் ஜெ.ஜெ- Episode 2)

First published: July 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading