தமிழகத்தில் ஆப்
ரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6623 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள ஹெராயின், ரூ.4.20 கோடி மதிப்பில் குட்கா, ரூ1.80 கோடி மதிப்பில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெருகிவரும் கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" என்ற பெயரில் போதைபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆபரேஷனை துவங்கி உத்தரவிட்டார்.
இதன்பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"ஆபரேஷன் கஞ்சா வேட்டை"யில் கடந்த 6 ம் தேதியிலிருந்து 25 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்திய மற்றும் போதைபொருட்கள் விற்பனை செய்து வந்த 6623 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள ஹெராயின், ரூ.4.20 கோடி மதிப்பில் குட்கா, ரூ1.80 கோடி மதிப்பில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக இதுவரை தமிழகத்தில் பிடிக்காத அளவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.23 கோடி மதிப்பில் 23 கிலோ அளவில் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் ஹெராயினை பதிக்கிவைத்திருந்த 7 குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் - டி.ஆர். பாலு
கடந்த 6 ம் தேதியிலிருந்து கஞ்சா கடத்தியதற்காக மற்றும் கஞ்சா விற்பனை செய்ததற்காக 816 வழக்குகள் பதியப்பட்டு 871 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ1.80 கோடி மதிப்புள்ள 1774 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 25 நான்கு சக்கர வாகனங்கள், 129 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 82 கிலோ, காஞ்சிபுரத்தில் 21 கிலோ கஞ்சா, மதுரையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Also read: அதிகாலையில் கேட்ட சத்தம்.. பெரம்பலூரில் சிக்கிய ஆந்திர திருடன்
குறிப்பாக தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்து வந்த தலைமறைவு கஞ்சா மொத்த வியாபாரிகளான பெரியசாமி (39) மற்றும் சீனிவாசன் (39) என்பவர்களை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைத்து நாமக்கல் போலிசார் கைது செய்தனர். இவர்களை கைது செய்ததன் மூலம் கஞ்சா விற்பனை மொத்த வியாபாரம் பெருமளவில் முடக்கப்பட்டது.

அதேபோல புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தியதற்காக 5457 வழக்குகளில் 5037 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.420 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னை பூந்தமல்லியில் 1200 கிலோ, திருச்சியில் 540 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 66 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதல் கணவனை கொன்று உடலை ட்ரம்மில் அடைத்து வைத்த கொடூரம்
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை பற்றிய விவரங்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தகவல் தரலாம் எனவும் மேலும், தமிழ்நாடு காவல்துறையின் சமூக வலைதளங்களான முகநூல்: https://www.facebook.com/tnpoliceofficial, டிவிட்டர்: @ tnpoliceoffl மற்றும் காவல்துறை வாட்ஸ்ஆப் எண் 94981-11191 ஆகியவற்றின் மூலமாக புகார் தெரிவிக்கலாம் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.