12,000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான 12,845 கோடி ரூபாய் மதிப்பிலான முதல் துணை நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

12,000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 4:19 PM IST
  • Share this:
2020-21 ஆண்டுக்கான கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை  அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. துணை நிதிநிலை அறிக்கையில் கொரோனா கட்டுபாடு, தடுப்பு மற்றும் நிவாரண பணிக்களுக்கு 9,027 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை இலவசமாக வழங்க 3,359 கோடி ரூபாய் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் குடும்ப  அட்டைதாரர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 4,218 கோடி அதில் சேர்க்கப்பட்டுள்ளது. தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு ஆயிரம் கோடியே 109 லட்சமும் 1,000 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேளாண்துறைக்கு ரூபாய் 107 கோடி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினை செயல்படுத்த மாநில அரசின்  மானியமாக ரூபாய் 316 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாட்டை பின்பற்ற ரூபாய் 437 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தேனி, திருப்பூர் மாவட்டங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க ரூபாய் 82 கோடியே 60 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கு, வருவாய் கோட்டாச்சியர் அலுவலகங்கள், குடியிருப்புகள் கட்டுவதற்கு மொத்தமாக 645 கோடி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகை வழங்க ரூபாய் 170.28 கோடியும், 5 புதிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூபாய் 645.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துணை நிதிநிலை மதிப்பீடு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading