• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும் - விஜயகாந்த்துக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து

ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும் - விஜயகாந்த்துக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து

விஜயகாந்த், ஓ.பன்னீர் செல்வம்

விஜயகாந்த், ஓ.பன்னீர் செல்வம்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருதுக்கு விஜயகாந்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த்துக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


    வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் ஏந்தி, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத் திட்ட உதவிகளை இன்றளவிலும் வழங்கிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் நூறு வயது கடந்து பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும். விஜயகாந்த் நற்பணி தொடர எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னதாக, விஜயகாந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: