அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் - ஓபிஎஸ்-ன் 3 ஆதரவாளர்களையும் நீக்கி பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் - ஓபிஎஸ்-ன் 3 ஆதரவாளர்களையும் நீக்கி பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்
ஓ.பன்னீர்செல்வம்
OPS Expelled from ADMK: ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்கி பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன்,அதிமுகவை பலவீனப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம், திமுகவுடன் நட்பு பாராட்டினார். எனவே அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க கோரி பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்பு தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் முன்மொழிந்தார்.
இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கியது பொதுக்குழு.பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்ட நீக்கப்பட்டவர்கள் யாருடனும் அதிமுகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.