மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு
ஓ.பன்னீர் செல்வம்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 3:21 PM IST
  • Share this:
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை செயற்குழுவில் பங்கேற்றவர்களே ஒப்புக்கொண்டுவருகின்றனர்.

இந்தநிலையில், இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது வீட்டில் அவரது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அவருடன், துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


மேலும், கடந்த ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மணிகண்டனும் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தார். அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தியும் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தார். ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு வெளியே 20 மேற்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் என்று தொடர்ந்து முழக்கமிட்டனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading