தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றோரு அணியும் செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.
தன்னால் நியமிக்கப்பட்ட 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், ’’எடப்பாடி பழனிசாமி குறித்து சரமாரியாக விமர்சனம் செய்தார். எனக்கு சோதனை வந்த போது என்னை தாங்கி பிடித்த தொண்டர்கள். பல சோதனைகள் கண்ட கட்சி அதிமுக.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த கட்சியை சிற்பாக வழி நடத்தி சென்றார்கள் என்றார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது? ரொக்கம் எவ்வளவு? அமைச்சர் சொன்ன டபுள் குட் நியூஸ்
ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று தீர்மானம் கொண்டு வந்தோம், அந்த தீர்மானம் ரத்து செய்ய மனம் எப்படி வந்தது?அந்த மகா பாவிகளை இந்த நாடு மன்னிக்காது என விமர்சனம் செய்த ஓபிஎஸ், ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று தொண்டர்கள் மனதில் ஒலித்து கொண்டு இருக்கிறது என்றார்.
ஓ.பி.எஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது, என்ன மணி (Money) அடித்தாலும் பப்பு வேகாது. தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பார் என சவால் விடுத்தார். கட்சியை கபலிகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது எனவும் கூட்டத்தில் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.