• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிறந்தநாளை முன்னிட்டு அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்

பிறந்தநாளை முன்னிட்டு அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்

அமித்ஷாவுடன் ஓ.பி.ரவீந்திரநாத்

அமித்ஷாவுடன் ஓ.பி.ரவீந்திரநாத்

அ.தி.மு.க எம்.பியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

  • Share this:
    2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.ரவிந்திரநாத். ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து பா.ஜ.கவுடன் நெருக்கம் காட்டிவருகிறார். குறிப்பாக, மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவராகவே இருந்துவருகிறார்.

    முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, மக்களவையில் முத்தலாக் தடை சட்டத்துக்கு ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்தார். இந்தநிலையில், ரவீந்திரநாத் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அவருடைய ட்விட்டர் பதிவில், ‘மதிப்புக்குரிய நம்முடைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். என்னுடைய பிறந்தநாள் அன்று அவரிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: