உதகை: காதலர் வரும்வரை காத்திரு... தாலியைத் தடுத்த மணமகள்!

உதகையில் தாலி கட்டும் நேரத்தில், காதலர் வருவார் எனக்கூறி மணமகனை தாலி கட்டவிடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் துனேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. வியாழக்கிழமை மஞ்சூர் அருகேயுள்ள மட்ட கண்டி கிராமத்தில் மணமகன் இல்லத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்தது. கடந்த வியாழக்கிழமை மணமகன் வீட்டுக்கு உறவினர்கள் அனைவரும் வந்துசேர்ந்து திருமண ஏற்பாடுகள் நடந்தது.

திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகள் அமர, உறவினர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தாலியை, பெரியோர்கள் எடுத்து மணமகன் கையில் கொடுத்தனர். மேடையில் இருந்த மணமகன் ஆனந்த், மணமகள் பிரியதர்ஷினிக்கு தாலி கட்ட சென்றார். அப்போது சினிமா பாணியில் தாலியை தடுத்த மணமகள், பார்த்திபன் வரட்டும் ஒரு மணி நேரம் காத்திருக்குமாறு கூறினார். யார் பார்த்திபன் என மணமகனும், அவரது உறவினர்களும் கேட்க, தனது காதலர் எனக்கூறி அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார்.ஒரு கட்டத்தில் மணமேடையைவிட்டு எழுந்த பிரியதர்ஷினியை அவரது தந்தை தடுக்க, தன்னை தடுக்காதீர்கள், தான் ஏதாவது செய்துகொண்டால் பழி அவர் மீது விழுந்துவிடும் என மணமகனை அச்சத்தில் ஆழ்த்தினார். ஆத்திரமடைந்த மணமகளின் நெருங்கிய உறவினர் ஒருவர் பிரியதர்ஷினியை தாக்கி மணமேடையில் அமருமாறு வற்புறுத்தினார். எதையும் காதில் வாங்கும் மனநிலையில் இல்லாத மணப்பெண் பார்த்திபன் வருவார், தன்னை அழைத்துச் செல்வார் என மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தார்.


Also read: தொடரும் தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

அங்கு கூடியிருந்த பெரியோர்கள் எவ்வளவு அறிவுரை கூறியும் மணப்பெண் கேட்காததால் அந்த திருமணம் நிறுத்தபட்டது. மணப்பெண் வீட்டில் பேசி முறையாக காதலருடன் சேர முயற்சி எடுத்திருந்தால், ஒரு அப்பாவி இளைஞர் திருமண மேடை வரை வந்து ஏமாற்றமும், அவமானமும் பட்டிருக்க வேண்டியதில்லை என திருமணத்திற்கு வந்த உறவினர்கள் கூறிச் சென்றனர்.


ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading