மீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...!

மீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...!

சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கறிஞர் அறைகள் மற்றும் நூலகங்கள் வரும் சனிக்கிழமை (17.04.2021) முதல் மூடப்படும் எனவும் இந்த அறிவிப்பாணை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் சனிக்கிழமை (23 ம் தேதி) வரை ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நேற்று காலை உயர்நீதிமன்றத்த்தில் வழக்கு விசாரணையின் போது, கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த அண்டைவிட மோசமாக இருப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசின் ஆலோசனைகளை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கோரினார்.

தொடர்ந்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ப.தனபால்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். அதில், முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக
ஆஜரானால் போதுமானது எனவும், உயர்நீதிமன்றத்தின் மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... Chennai Power Cut | சென்னையில் இன்று (16-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை...!

வழக்கறிஞர் அறைகள் மற்றும் நூலகங்கள் வரும் சனிக்கிழமை (17.04.2021) முதல் மூடப்படும் எனவும் இந்த அறிவிப்பாணை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23-ம் தேதி ( சனிக்கிழமை) வரை இந்த நடைமுறை தொடரும் எனவும், 22 ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொரோனா சூழல் குறித்து மீண்டும் ஆய்வு செய்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: