ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: ஈசிஆர் சாலையில் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி!

மாண்டஸ் புயல்: ஈசிஆர் சாலையில் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி!

மாதிரி படம்

மாதிரி படம்

புயல் வீசும் போது கனமழை மற்றும் பல காற்று வீசும், மரங்கள் விழும் என்பதனை கருத்தில் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. தற்போதே சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 1 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னையை நெருங்கிவிட்ட புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழு வீச்சில் கரையைக் கடக்கத் தொடங்கும்.

இந்நிலையில், புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் அமைந்துள்ளது. தற்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் கனமழை துவங்கி உள்ளதால், புயல் வீசும் போது கனமழை மற்றும் பல காற்று வீசும், மரங்கள் விழும் என்பதனை கருத்தில் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை. கார்,டாக்ஸி போன்ற வாகனங்கள் வரும்போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அவை அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் ஈசிஆர் வழியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட வருகிறது இதனால் புதுச்சேரி தமிழக எல்லை பகுதியில் கோட்டகுப்பம் போலீசார் தடுப்புகள் அமைத்து அவ்வழியாக வரும் கனரக வாகனங்கள் திருப்பி அனுப்பிவருகின்றனர். மேலும் அவசர காரணங்களுக்காக செல்லும் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Cyclone Mandous, Weather News in Tamil