ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000.. வெல்லத்துக்குப் பதில் சர்க்கரை.. தமிழ்நாடு அரசின் ப்ளான் இதுவா?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000.. வெல்லத்துக்குப் பதில் சர்க்கரை.. தமிழ்நாடு அரசின் ப்ளான் இதுவா?

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், சில இடங்களில் வெல்லம் உருகிவிட்டதாகவும் கரும்பு காய்ந்து விட்டதாகவும் புகார் எழுந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசின் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் வழக்கமாக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவது வழக்கம். அதன்படி 2022ம் ஆண்டு வெல்லம், முந்திரி, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழக்கப்பட்டது. 2021ம் ஆண்டில் குடும்ப அட்டைக்கு ரூ. 2500 வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள பரிசு தொகுப்பு குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், சில இடங்களில் வெல்லம் உருகிவிட்டதாகவும், கரும்பு காய்ந்து விட்டதாகவும் புகார் எழுந்தது.

எனவே, இந்த ஆண்டு நியாயவிலைக் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை மட்டும் வழங்கலாமா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுப்பில் நெய் இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

First published:

Tags: CM MK Stalin, Pongal, Pongal 2023, Ration Shop, Tamilnadu