தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும்- பொன்.ராதாகிருஷ்ணன்

அண்ணல் அம்பேத்கர் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க நினைத்தாரோ அதன் படி அவரது வழியில் நாங்கள் பயணித்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும்- பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: April 17, 2019, 2:59 PM IST
  • Share this:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தான் முடியும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அண்ணல் அம்பேத்கர் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க நினைத்தாரோ அதன் படி அவரது வழியில் நாங்கள் பயணித்து வருகிறோம். ஒடுக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட நிலையில் இருந்த மக்கள் மேல் எழுந்து வர வேண்டும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்’ என்று கூறியுள்ளார்.

மேலும் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள். இவர்களது ஆட்சியில் தான் 1.5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள், சொந்த மண்ணை இழந்து அகதிகளானார்கள். இந்த துரோகத்தை செய்தவர்கள் காங்கிரஸ்-திமுக கட்சிகள் என்று கூறியுள்ளார்.


இதையடுத்து பேசிய அவர், இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தான் முடியும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களது தாய் மொழியை மறவாத வகையில் தமிழ் பயிற்சி அளிக்க வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வளம் பெறவேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Also watch

First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading