ரஜினிகாந்த் ’ராஜராஜ சோழன் ஆட்சி’ அமைப்பார் - அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

கமல் ஹாசன் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை என்றும், அவரின் வாக்கு வங்கி நிலையானது அல்ல என்றும் அர்ஜூன் சம்பத் கூறினார்.

  • Last Updated :
  • Share this:
வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் முதல்வர் பதவிக்கான போட்டியாக இருக்கும் என்றும், அதில் ரஜினி வென்று முதல்வர் ஆவார் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி தனது முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என்றும், முதல்வர் பதவிக்கு ரஜினிக்கும் , ஸ்டாலினுக்கும் இடையேதான் போட்டியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதில் ரஜினி வெற்றி பெற்று முதல்வர் ஆவார் என்றும்,  ராஜராஜசோழன் ஆட்சியை அவர் வழங்குவார் என்றும் அர்ஜூன் சம்பத் குறிப்பிட்டார்.

கமல் ஹாசன் பற்றி குறிப்பிட்ட அவர், அவர் படம் ஒடக் கூடிய ஒரு சில இடங்கள் மற்றும் மாற்றத்தை விரும்ப கூடியவர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். கமல் ஹாசன் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை என்றும், அவரின் வாக்கு வங்கி நிலையானது அல்ல என்றும் அர்ஜூன் சம்பத் கூறினார்.

VIDEO:
Published by:Yuvaraj V
First published: