• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேலையே செய்யாமல் இருக்கும் ஒரு சில மருத்துவர்கள் தான் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்: மா.சுப்பிரமணியன்

வேலையே செய்யாமல் இருக்கும் ஒரு சில மருத்துவர்கள் தான் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்: மா.சுப்பிரமணியன்

வேலையே செய்யாமல் இருக்கும் ஒரு சில மருத்துவர்கள் தான் சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஆத்மார்த்தமாக மன திருப்தியுடன் மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனா பேரிடரிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை கெடுப்பதற்கு முனைய வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, மருத்துவர்களுக்கு தற்போதைய நிலை கடினமான இலக்குதான், என்றாலும் வேலை செய்வதில் சிரமம் இருந்தாலும், திருப்தியாக, மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மருத்துவர்களின் கடினத்தை உணர முடிகிறது.

    மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக ஒரு சில மருத்துவர்கள் சமூக வலைதளங்களில் கூடுதல் பணிச்சுமை தரப்படுவதாகவும், டார்கெட் வைத்து வேலை வாங்குவதாகவும் செய்தி பரப்பி வருகின்றனர். அதுபோல் பரப்புபவர்கள் குறித்து விசாரித்து பார்த்ததில், அவர்கள் வேலையே செய்யாமல் இருப்பவர்களாக இருக்கிறார்கள். இதுபோல வேலையே செய்யாமல் இருக்க யார் ஆசைப் படுகிறார்களோ அவர்கள் தான் இந்த செய்தியை பரப்புகின்றனர்.

    அவர்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள், இன்னும் ஓரு மாதம் கஷ்டபடுபவர்களை கொஞ்சம் விட்டுவிடுங்கள். ஆத்மார்த்தமாக மன திருப்தியுடன் மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனா பேரிடரிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை கெடுப்பதற்கு முனைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, இதுபோன்ற பணி செய்யாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உறுதியாக அது யாராக இருந்தாலும், கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் சமூகவலைதளங்களில் எங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக பழிவாங்கும் நடவடிக்கை என்பது இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு, ஆர்டர் போடும் அமைச்சர்களாக நாங்கள் இல்லை. கொரோனாவின்போது பல முறை ஐசியூக்களுக்கே சென்றோம். மலை கிராமங்களுக்கு கூட மருத்துவர், செவிலியருடன் சென்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: