கடந்தாண்டு 4, இந்தாண்டு 5 - மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள்

கடந்தாண்டு 4, இந்தாண்டு 5 - மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள்

கோப்புப் படம்

தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்த போதும், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு, கானல் நீராகவே உள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் ஒருவர் மட்டுமே 400 மதிபெண்-க்கு மேல் எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  நடப்பு 2019-20 மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, தேசிய தேர்வாணைய முகமை நடத்தியது. இதில், நாடு முழுவதும் எழுதிய 14 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களில், 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்றனர்.

  தமிழகத்தை பொறுத்தவரை, நீட் எழுதிய ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 மாணவர்களில், 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதமானது 9.01 விழுக்காடு அதிகரித்து, 48.57 விழுக்காடானது.

  அந்த வகையில் 720 மதிப்பெண் கொண்ட நீட் தேர்வில், 550-க்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 81 ஆக இருந்தது.

  மேலும், 451 முதல் 500 மதிப்பெண் பெற்று மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.

  இதில், தமிழகத்தில் மட்டும் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 680 ஆகி அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில், 5 ஆயிரத்து 634 ஆக இருந்தது.

  ஆனால், நடப்பு ஆண்டில் 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த 19 ஆயிரத்து 680 மாணவர்களில், ஒரே ஒரே ஒருவர் தான் அரசுப் பள்ளியில் பயின்றவர் ஆகும்.

  எஞ்சிய மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் பயின்றவர்களாக உள்ளனர். அத்துடன், 300-க்கு மேல் நீட் மதிப்பெண் எடுத்து, மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெற்றவர்களில், 5 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் ஆவர். கடந்த ஆண்டு இது 4 ஆக இருந்தது.

  நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் என்பது நடப்பு ஆண்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு 107 ஆகவும் மற்ற பிரிவினருக்கு 134 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்த போதும், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு, கானல் நீராகவே உள்ளது.

  Published by:Sankar
  First published: