• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனாவால் பெற்றோரை இழந்த 197 குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 197 குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த 92 குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 3,409 குழந்தைகள் என மொத்தம் 3501 குழந்தைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.

  • Share this:
கொரோனாவால் பெற்றோரை இழந்த 197 குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த 92 குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 3,409 குழந்தைகள் என மொத்தம் 3501 குழந்தைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று கட்டங்களாக தற்போது வரை 197 குழந்தைகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த 14 குழந்தைகள், ஏற்கனவே பெற்றோரில் ஒருவரை இழந்து தற்போது கொரோனாவால் மற்றொருவரையும் இழந்து இருக்கும் 44 குழந்தைகள்,  என 58 குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் நிதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Also read: வழக்கறிஞர்கள் செய்யும் காரியமா இது? கஞ்சா விற்பனை செய்து போலீசாரிடம் வசமாக சிக்கினர்!

கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்திருக்கும் 139  குழந்தைகளின் காப்பாளர்களுக்கு தலா 3 லட்சம் நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 197 குழந்தைகளுக்கு மொத்தம் 7.07 கோடி ரூபாய் இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: