முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு - ஆர்டிஐ மூலம் தகவல்..!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு - ஆர்டிஐ மூலம் தகவல்..!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு 12 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது, ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 4 ஆண்டுகளைக் கடந்தும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததால், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.

கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள பதிலில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், மதுரை எய்ம்ஸின் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடான ஆயிரத்து 977 கோடி ரூபாயில், இதுவரை 12 கோடியே 35 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் எய்ம்ஸ்-க்கு ஆயிரத்து 218 கோடி ரூபாயும், உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் எய்ம்ஸ்க்கு 874 கோடி ரூபாயும், குஜராத் மாநிலம் ராஜ்கோட் எய்ம்ஸ்க்கு 622 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read : கொழுப்பு குறைவு.. விலை கம்மி.. வருகிறது ஆவின் புதிய பால்!

மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைளுக்கு கூடுதலாக நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் மதுரை எய்ம்ஸ்-க்கு மிகக் குறைவாக 1 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளது.

First published:

Tags: AIIMS Hospital, Aiims Madurai, RTI