கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, திருமண நிகழ்வில் அதிகப்பட்சமாக 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கி இருகின்றன. அந்த வகையில், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த 4 வாரங்கள் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை வித்துள்ளது. அதன்படி, நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருமண நிகழ்வில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும், ஆட்டோவில் ஓட்டுநரை தவிர்த்து 2 நபர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.
உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் மொத்தம் உள்ள இருக்கையில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே இரவு 11 மணிவரையில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கலாம். ஆனால், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.
Must Read : கொரோனா இரண்டாம் அலை... மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம் - மு.க.ஸ்டாலின்
அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தும் பணிகள் தொடங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona spread, CoronaVirus, Covid-19, Marriage, Wedding plans