ஆன்லைனில் டாஸ்மாக் மது விற்பனை - சட்டப்பேரவையில் விவாதம்

மாதிரிப் படம்

அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் எந்த நிலையிலும் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை என்பது அறவே கொண்டுவரப்பட மாட்டாது என உறுதியளித்தார்.

 • Share this:
  ஆன்லைனில் டாஸ்மாக் மது விற்பனை செய்ய இருப்பதாக செய்திகள் வருகிறது, இதை பரிசிலீனை செய்யவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

  தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஆன்லைனில் மதுவிற்பனை என்று தகவல் வருகிறது. அவ்வாறு அது நடந்தால் மது ஆர்டர் செய்யும் போது நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டால், அப்போது அந்த வீட்டில் இருக்கும் பெண் அந்த மதுவை வாங்க நேரிடும். இதனால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் ? எனவே அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, அப்படி வெக்கப்பட்டுனாலும் வாங்கம இருக்கலாம்ல என்றார்.

  பின்னர் பதிலுரையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் எந்த நிலையிலும் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை என்பது அறவே கொண்டுவரப்பட மாட்டாது என உறுதியளித்தார். மேலும் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார் அதன்படி, டாஸ்மாக ஊழியர்களுக்கு  500 ரூபாய் கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

  Also Read : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு - சட்டப்பேரவையில் அறிவிப்பு

  மேலும்  கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல், மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

  மின் ஆளுமை நடவடிக்கைகளின் கீழ் 74 சேவைகளை இணையவழி மூலம் வழங்குதல், தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணயிடம் உருவாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: