ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

தற்கொலை செய்துகொண்ட மாணவர்

தற்கொலை செய்துகொண்ட மாணவர்

நேற்று மாலை வரை குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த சந்தோஷ் அதன்பின்னர் சுமார் 9.50 மணிக்கு ஒரு வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Manapparai, India

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நாளங்காடியின் பின்புறம் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக இன்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் சந்தோஷ் வயது 23 என்பதும் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தான் அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. சந்தோஷ் கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி இருப்பதும் சமீபத்தில் கூட வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை எடுத்துக் கொண்டு ரம்மி விளையாடியதும் தெரியவந்தது.

Also Read: இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும் : ரம்மி விளையாட்டிலிருந்து எளிதாக விடுபடலாம்!

நேற்று முன்தினம் விட்டை விட்டுச் சென்ற சந்தோஷ் நேற்று மாலை வரை குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர் சுமார் 9.50 மணிக்கு ஒரு வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் ”என்னுடைய மரணத்திற்கு முழுகாரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்துள்ளதால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து போன் செய்த போது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலை ரெயில்வே தண்டவாளத்தில் சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் இறந்தவரின் உடலை ரெயில்வே போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Published by:Arunkumar A
First published:

Tags: Crime News, Online rummy, Sucide