ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் தொடரும் ஆன்லைன் ரம்மி உயிரிழப்பு - தீர்வு என்ன?

தமிழகத்தில் தொடரும் ஆன்லைன் ரம்மி உயிரிழப்பு - தீர்வு என்ன?

தமிழகத்தில் தொடரும் ஆன்லைன் ரம்மி உயிரிழப்பு - தீர்வு என்ன?

ஆன்லைன் மோசடியில் கைதான சீனாவைச் சேர்ந்த நபர்கள், ஆன்லைன் லோன் செயலிகள் மூலம் 1 லட்சம் இந்தியர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் வசூலித்து சீனாவிற்கு அனுப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிங்கப்பூரில் இருந்தபடி சீன ஆன்லைன் லோன் செயலிகளை இயக்கி வந்த நபர் சிக்குவாரா?

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆன்லைன் லோன் செயலி மோசடியில் கைதான சீனர்கள், தாங்கள் சுருட்டிய 300 கோடி ரூபாயை, ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் என பல துறைகளில் முதலீடு செய்துள்ளனர். தோண்டத் தோண்ட பூதங்களாக வரும் சீனர்கள் கைது சம்பவத்தில் தற்போது நடப்பது என்ன?

  பெங்களூருவில் கால்சென்டர் நடத்தி இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்த சீனாவின் க்வாங்டோங் மாகாணத்தைச் சேர்ந்த 28 வயதான வூ யுவான்லும், 38 வயதான ஜியோவா யமோவா என்ற இரண்டு சீனர்களும், பிரமோதா மற்றும் பவன் என்ற இரண்டு இந்தியர்களும் கடந்த வாரம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

  சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் AZACUS TECHNO SOLUTIONS PVT LTD என்ற நிறுவனத்தின் இயக்குநரான மனோஜ்குமார், தனது நிறுவன ஆவணங்கள் மூலம், சீனர்கள் பெங்களூவில் நடத்தி வந்த ட்ரூ கிண்டில் நிறுவனத்தி்ற்கு 1600 சிம்கார்கள் வாங்கிக் கொடுத்தார்.

  இந்த சிம்கா்ரடுகளைப் பயன்படுத்தித் தான் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்களை சீனர்கள் திருடியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சீனர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

  மொழிப் பிரச்னை இருப்பதால் சீன மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். கைதான சீனர்களை சிங்கப்பூரில் வசிக்கும் ஹாங்க் என்ற சீனர் இயக்கி வந்துள்ளார்.

  ட்ரூ கிண்டில் மூலம் எண்ணற்ற ஆன்லைன் கந்துவட்டி செயலிகளைஉருருவாக்கி அவற்றின் மூலம் சில கோடி ரூபாயை 1 லட்சம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கியுள்ளனர். அந்தக் கடனில் இருந்து இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்த சீன நிறுவனம், அந்தத் தொகையை பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட் போன்ற சில துறைகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளனர்.

  இந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. சென்னையைச் சேர்ந்த மனோஜ்குமாருக்கு முகநுாலில் அறிமுகமான ரியா குப்தா என்ற பெண் யார்? அவரது முகநுால் முகவரி எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது? பாஸ்போர்ட் காலாவதியாகியும் அவர்கள் பெங்களூருவில் தங்கியிருந்தது எப்படி? அவர்களுக்கு உதவிய அதிகாரிகள் யார் யார்?

  இந்தியாவில் எந்தெந்த ஓட்டல்களில் தங்கியிருந்தனர்? யார் யார் அவர்களை சந்தித்தனர்?சீனர்கள் தங்கள் செல்போனில் இருந்து இந்தியாவில் யார் யாரைத் தொடர்பு கொண்டு என்ன பேசினார்கள்? வேறு எங்கெங்கு கால் சென்டர்கள் நடத்தியுள்ளனர்? இவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யார் யார்? சிங்கப்பூரில் இருந்தபடி இவர்களை இயக்கும் சீனரான ஹாங்க் என்பவர் யார்? அவர் மீது சிங்கப்பூரில் ஏதேனும் வழக்குகள் உள்ளனவா?

  இதுபோன்ற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இவற்றிற்கு விடை தேடும் வகையில் சீனர்களிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலு படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜனவரி 10, 2021)

  மேலும் சர்வதேச அளவில் இதில் பணப் புழக்கம் இருந்திருப்பதால், அதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Online rummy