Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதா.. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளதா?

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதா.. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளதா?

மாதிரி படம்

மாதிரி படம்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதா, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளதாக, ஆளுநர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2022 குறித்து, மாநில அரசிடம் ஆளுநர் தெரிவித்துள்ள சந்தேகங்கள் என்ன என்பது குறித்து, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரம்மி மற்றும் போக்கரைப் பொறுத்தவரை, அவை ஆஃப்லைனிலும் ஆன்-லைனிலும் விளையாடப் படுவதாகவும், அதில் எந்த வேறுபாடும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. GAME OF SKILL எனப்படும் விளையாட்டுத் திறன் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு அடிப்படை உரிமை என்பதால், ஆன்லைன் ரம்மியை முற்றிலும் தடை செய்ய முடியாது என்பதும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட மசோதா சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைவதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இது அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் உரிமை உணர்வை மீறுவதாக உள்ளது எனவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்: திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ஆன்லைன் ரம்மி தோல்வியால் ஏற்படும் மரணம், அதற்கு அடிமையாதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, கேமிங் தளத்தின் நேர்மை குறித்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீர்வு காண முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கேமிங் தளங்களே மோசடி செய்பவை என்ற ஆதாரமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் அனுமானத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Online rummy, RN Ravi, Tamilnadu government