Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை; மீறினால் ₹5000 அபராதம் - அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை; மீறினால் ₹5000 அபராதம் - அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Online Rummy Ban in Tamilnadu | ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போர்க்கு ₹10000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தடையை மீறி விளையாடினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பலர் தங்களது பணத்தை இழந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முடிவுக்கு வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அனுமதி அளித்துள்ளார்.



    இந்த புதிய சட்டத்தின்படி பணம் வைத்து ஈடுபடுவோரையும், ஈடுபடுத்தப்படும் கணினி உபகரணங்களுக்கு தடை செய்யப்படும். தடையை மீறி விளையாடினால் ₹5000 அபராதமும் 6 மாதசிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போர்க்கு ₹10000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,



    நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: Online rummy

    அடுத்த செய்தி