• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆன்லைன் ஆர்டர்கள்: டெலிவரி பாய்கள் சந்திக்கும் பிரச்னைகள்

ஆன்லைன் ஆர்டர்கள்: டெலிவரி பாய்கள் சந்திக்கும் பிரச்னைகள்

மாதிரி படம்

மாதிரி படம்

நம் பசிக்காக ஒடும் ஆன்லைன் டெலிவரி பாய்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பசியெடுத்தால், உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து, வீட்டுக்கே உணவுகளை வரவழைக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உணவை தேடிவந்து கொடுக்கும் டெலிவரி பாய்கள் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கின்றனர். 

ஆன்லைன் மூலம், உணவு வாங்கும் கலாச்சாரம் சென்னை போன்ற பெருநகரங்களில் விரிவடைந்து வருகிறது. நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உணவை வீடு தேடி கொண்டு சேர்க்கும் புட் டெலிவரி தொழிலை, படித்தவர்கள் படிக்காதவர்கள் என வித்தியாசம் இன்றி பலரும் செய்கின்றனர். குடும்ப சூழ்நிலைக்காக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், காலில் சக்கரம் கட்டிக்கொண்டு வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு உணவை கொண்டு செல்கின்றனர்.

காலை 6 மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகிறது இவர்களின் பயணம். ஒரு பெரிய பையையோ அல்லது உணவு கொண்டு செல்லும் பெட்டியையோ இருசக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு பயணத்தை துவங்கும் இவர்கள், ஆர்டருக்காக உணவக வாசலில் காத்திருப்பர். ஆர்டர் வந்ததும் அதனை குறித்த நேரத்திற்குள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குள் பல பிரச்னைகளை சந்திப்பதாகவும், ஆனால் வாடிக்கையாளர்கள் அலட்சிய சொற்களை பயன்படுத்துவதாகவும் வேதனையாகக் கூறுகின்றனர்.

ஆன்லைனில் ஆடர் செய்த உணவை எடுத்து செல்லும் டெலிவரி பாய்


மேலும் நள்ளிரவு 3 மணி வரையிலும் உணவு டெலிவரி கொடுக்கும் வேலையை செய்யும் இவர்கள், இரவு நேரங்களில் பல இடர்களை எதிர்கொள்வதாக குறிப்பிடுகின்றனர். காவல்துறையினரின் விசாரணை, வழிப்பறி, மது அருந்திவிட்டு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் குடிமகன்கள் செய்யும் அட்டகாசங்களைத் தாண்டி இவர்களின் பணி தொடர்கிறது.

நம் பசிக்காக ஒடும் இவர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. உள்ளே தள்ளும் உணவு சுவையாக இருக்க வேண்டும் என நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தைகள் சுவையாக இருக்க வேண்டும் என நினைப்பதில்லை. டெலிவரி பாய் என்ற உதாசீனத்தோடே அவர்களை  பலவிதமான பிரச்னைகள் எதிர்கொள்கிறது.

Also see... சாதி ஒழிப்புக் களத்தில் தொடர்ந்து போராடுவோம் - கவுசல்யா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: