HOME»NEWS»TAMIL-NADU»online love issue younger man commits suicide due to his girl friend already got married and having 2 kids in chengam vai
ஆன்லைன் காதல்: காதலிக்கு 2 குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆன்லைன் மூலம் அறிமுகமாகி காதலியானவருக்கு, திருமணம் முடிந்து இரு குழந்தைகள் இருப்பதை அறிந்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பாளையம் பகுதியில் அம்ரின் என்பவர் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்த பூபதி என்பவருக்கும் யோயோ (yoyo) செயலி மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. அம்ரின் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவி என்ற அடையாளத்துடன் பூபதியிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.
காலப்போக்கில் நட்பு காதலாக மாறிய நிலையில் எட்டு மாதங்களுக்கு மேலாக சமுக வலைதளம் மூலமாகவே இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். கடந்த 20ஆம் தேதி சேலத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு செல்வதாக, தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்ற பூபதி, காதலி அம்ரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அதன்பிறகுதான் அம்ரினுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், இரு குழந்தைகள் இருப்பதும் பூபதிக்கு தெரிய வந்திருக்கிறது. இருந்த போதிலும் காதலியின் கணவர் வெளியூருக்கு சென்றிருந்ததால் அவரது வீட்டிலேயே இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பூபதியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு காதலி அம்ரின் அருகிலிருக்கும் கடைக்கு சென்றிருக்கிறார்.
திரும்பி வந்து பார்த்த போது காதலன் பூபதி தூக்கில் சடலமாக தொங்கி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அம்ரின், காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூபதியின் சடலத்தை கைப்பற்றி அவரிடமிருந்த மஞ்சள் தாலி, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பூபதி தற்கொலைக்கான பின்னணியை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.