Home /News /tamil-nadu /

ஆன்லைன் செயலி மூலம் கடன்.. புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை

ஆன்லைன் செயலி மூலம் கடன்.. புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை

ஆன்லைன் கடன் செயலி

ஆன்லைன் கடன் செயலி

கந்துவட்டியை மிஞ்சும் ஆன்லைன் கடன் செயலியின் அக்கிரமம் தாங்காமல் உயிரை மாய்த்துகொள்ளுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியின் சித்திரவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
    ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திருப்பி செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்க் செயலி நிறுவனத்தார் வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் செயலி( Loan App) மூலம் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எவ்வித ஆவணங்களும் இன்றி சில நிமிடங்களிலேயே பணம் கிடைத்துவிடுவதால் இதனை பலரும் நாடுகின்றனர். இதன் காரணமாக கடன் செயலிகள் முற்றீசல் போல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

    இவ்வாறு எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் வழங்கும் செயலிகள் கடனை வசூலிக்கும் விதமே தனி. குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி விதிக்கப்படும். மேலும், நமது மொபைலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் நம்பர்களுக்கு கால் செய்து கடனை கட்ட சொல்லுமாறு கூறுவார்கள். பின்னர் நமது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு கடனை கட்ட கூறுவார்கள்.

    கந்துவட்டியை மிஞ்சும் ஆன்லைன் கடன் செயலியின் அக்கிரமம் தாங்காமல் உயிரை மாய்த்துகொள்ளுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியின் சித்திரவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    மேலும் படிக்க: எம்.ஜி.எம் நிறுவனம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

    சென்னை சூளைமேட்டை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்துள்ளார். ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் ஆதாரில் உள்ள அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிடுவோம் என கடன் வசூலிக்கும் முகவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து  அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியன் இன்று தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Loan, Loan app, Suicide

    அடுத்த செய்தி