முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நாடாளுமன்றத்தில் விவாதிக்க டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நாடாளுமன்றத்தில் விவாதிக்க டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து திங்கட்கிழமை மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

மாநிலங்களவையில் 26 மசோதாக்கள், மக்களவையில் 9 மசோதாக்கள் என 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லாலு பிரசாத், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரிடம் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : எடப்பாடி பழனிசாமி மேல் வழக்குப்பதிவு... காவல்துறையைக் கண்டித்து போராட்டம் அறிவித்த அ.தி.மு.க

 இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.

First published:

Tags: Addicted to Online Game, Online rummy, Tamil Nadu