• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ”நாள்தோறும் கிடைத்த வருமானம், வாரத்திற்குக் கூட இல்லை” - ஆர்டருக்காகக் காத்திருக்கும் டெலிவரி பாய்ஸ்

”நாள்தோறும் கிடைத்த வருமானம், வாரத்திற்குக் கூட இல்லை” - ஆர்டருக்காகக் காத்திருக்கும் டெலிவரி பாய்ஸ்

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா ஊரடங்கு நேரத்திலும் பொதுமக்களுக்கு உணவு வழங்க உழைத்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள், பல மணி நேரம் ஆர்டர் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

  • Share this:
    சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெளியூர் நபர்களும், வெளிமாநிலத்தவர்களும் சாரை சாரையாக சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். குறிப்பாக, ஹாஸ்டல்கள் மூடப்பட்டதோடு, நண்பர்களாகச் சேர்ந்து தங்கியிருந்தவர்களும் சென்று விட்டனர். அதனால், ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களுக்கு பலத்த அடிதான். இதில் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பது அந்த நிறுவனங்களில் டெலிவரி பாய்களாக வேலை செய்யும் இளைஞர்கள்தான்.

    கொரோனா அச்சத்தால் பெரும்பாலானோர் வெளியில் இருந்து உணவு வாங்கிச் சாப்பிட அஞ்சுவதால், இவர்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்கள் மிகச் சொற்பமே. இதனால், கொரோனா பாதிப்புக்கு முன்பு நாள்தோறும் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தவர்கள், தற்போது வாரத்திற்கு கூட ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்கின்றனர்.

    Also see:

    மேலும், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஆர்டர் டெலிவரி தொகையைக் குறைத்ததும் வருமானம் குறைய ஒரு காரணம் எனக் கூறும் இவர்கள், பெட்ரோல் விலையும் ஏறிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்கின்றனர்.

    Also read: கீழடி 6ம் கட்ட அகழாய்வு குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிப்பு

    அத்தோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதாக வேதனை தெரிவிக்கும் இவர்கள், வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் கிடைக்கும் வருமானத்திற்காக வேலைக்குச் சென்றால், போலீசாரின் கெடுபிடியைத் தாங்க முடியவில்லை எனவும் கொரோனா பிரச்னை தீர்ந்தால், தங்களது பிரச்னையும் ஓரளவுக்குத் தீரும் எனவும் கூறுகின்றனர். மேலும், போலீசார் தங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: