Home /News /tamil-nadu /

ஆன்லைனில் தரமான மீன்கள் விற்பனை.. அசத்தும் மீனவ இளைஞர்கள்

ஆன்லைனில் தரமான மீன்கள் விற்பனை.. அசத்தும் மீனவ இளைஞர்கள்

ஆர்டரின் பேரில் ஆன்லைனில் தரமான மீன்கள் விற்பனை..

ஆர்டரின் பேரில் ஆன்லைனில் தரமான மீன்கள் விற்பனை..

பழவேற்காடு இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, சென்னையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை தொடங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருவள்ளூரில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யப்படுவதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் முடங்கியிருந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கள் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாக மீனவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதுடன், புலிகாட் ஏரியிலும் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மீன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும், ஊடரங்கு தளர்வு அளிக்கப்பட்டபோதும், முன்புபோல் மீன் விற்பனை இல்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பழவேற்காடு இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, சென்னையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை தொடங்கியுள்ளனர். இதற்காக, தனியாக வெப்சைட் ஒன்றை உருவாக்கி, ஆர்டரின் பேரில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். பழவேற்காடு பகுதியில் மட்டும் கிடைக்கும் வெள்ளை இறால், சிங்க இறால் உட்பட மத்தி, சூறை, நண்டு உள்ளிட்ட ஏராளமான கடல் உணவுகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுகின்றன. இரவு 10 மணி வரை வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் பெற்று, அதிகாலையில் வீட்டிற்கே சென்று மீன் விநியோகிக்கப்படுகிறது.



    மீன்கள் மொத்தமாக வாங்கப்பட்டு, அவை பெண் தொழிலாளர்கள் உதவியுடன் சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால் தங்களின் வாழ்வாதாரமும் மேம்படுவதாக பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    ஆன்லைன் மீன் வர்த்தகம் தற்போது சென்னையில் தேனாம்பேட்டை, எழும்பூர், அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பிரபலமாகியுள்ளது. மேலும், புறநகர் பகுதிகளிலும் விற்பனையை விரிவுபடுத்த பழவேற்காடு மீனவ இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Fishermen, Thiruvallur

    அடுத்த செய்தி