ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சமமானதாக இல்லை - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாகுபாடின்றி அனைவரும் ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை, தமிழக அரசு தாமதமின்றி எடுக்க வேண்டுமென்று, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சமமானதாக இல்லை - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • Share this:
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பை படிப்பதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், மாணவி நித்யஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனை தருவதாக கூறியுள்ளார்.

அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் என்று சொல்வதற்கு முன்னால், அனைவருக்கும் அத்தகைய வழிமுறையைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறதா, தேவைப்படும் பொருளாதாரப் பின்புலம் உள்ளதா என்பதை அரசு ஆழ்ந்து சிந்திக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ALSO READ |  ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்


பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்பை நடத்துங்கள் என்று, ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காததால் ஹரிஷ்மா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின்.  சமவாய்ப்பை வழங்காத கல்வி, ஏற்றத்தாழ்வையும் விரக்தியையும் விதைத்து, பிஞ்சுகளின் உயிரைப் பறிக்கும் என்பதை ஆட்சியர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading