ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Paramedical படிப்புகளுக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்..

Paramedical படிப்புகளுக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்..

கோப்பு படம்

கோப்பு படம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு மாணவர்களுக்குரிய கலந்தாய்வு நேற்று நடைபெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம்., ஆய்வக தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தாமதமாகிவந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    துணை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு மாணவர்களுக்குரிய கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 53 மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், 27 பேர் கலந்தாய்வில் பங்குபெற்றனர். அவர்களில் 23 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவ படிப்புகளை தேர்வு செய்தனர்.

    மேலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வின் முதல் சுற்று இன்று தொடங்கி 15-ஆம் தேதி வரையிலும் (தரவரிசை 1 முதல் 7059 வரை), 2-ஆம் சுற்று கலந்தாய்வு 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலும் (தரவரிசை 7060 முதல் 17,078 வரை), 3-ஆம் சுற்று கலந்தாய்வு 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையிலும் (தரவரிசை 17,079 முதல் 27,332 வரை), 4-ம் சுற்று கலந்தாய்வு 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலும் (தரவரிசை 27,333 முதல் 37,334 வரை) நடைபெற உள்ளது.

    Published by:Gunavathy
    First published:

    Tags: Paramedical course, Paramedical jobs