Home /News /tamil-nadu /

ஆன்லைன் வகுப்பு மூலம் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்க வேண்டாம் - ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

ஆன்லைன் வகுப்பு மூலம் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்க வேண்டாம் - ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

RJ பாலாஜி.

RJ பாலாஜி.

ஆன்லைன் வகுப்பு எனும் பெயரில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்க வேண்டாம் என ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஊரடங்கு காரணமாக பல்வேறு பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி வகுப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றன. கேரளாவில் 10-ம் வகுப்பு மாணவி தேவிகா இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதில் இருக்கும் சிக்கல்களை கல்வியாளர்கள் பலர் முன்வைத்து வருகின்றன.

    இந்நிலையில், ஆன்லைன் வகுப்பு எனும் பெயரில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்க வேண்டாம் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் வைத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாலாஜி, குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் அதே சமயம் பாடங்களை முடிக்கும் வழி என்னவென்பதை பள்ளிகள் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Online class, RJ Balaji

    அடுத்த செய்தி